பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 61 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு விவசாயிகள் மக்காச்சோளம் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.
இந்நிலையில் காலம் தவறிய பருவ மழையால் மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை அரசு காப்பீட்டு தொகையை வழங்காததால் விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆகையால், விரைந்து காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.