இந்த ஆண்ட்டில் மட்டும் சுமார் 3 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை மாலத்தீவு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதற்காக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தவும், கிரிக்கெட் முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு 2020-ல் இருந்து 2023 வரை இந்தியாவில் இருந்து ஏராளமானோர் மாலத்தீவிற்கு வருகை தந்தனர்.
2023-ல் மாலத்தீவிற்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1 லட்சத்து 30 ஆயிரத்து 805 ஆக குறைந்தது. இந்த சூழலில், இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவு முடிவு செய்துள்ளது.