செரீபியாவின் நோவா சேட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செரீபியாவின் நோவா சேட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை அண்மையில் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையத்தில் சமீபத்தில் இருமுறை பராமரிப்பு பணி நடைபெற்ற போதிலும், மேற்கூரை இடிந்து விழுந்தது பல்வேறு சந்தேகத்தை எழுப்பியது.
ரயில் நிலைய பராமரிப்பை குத்தகைக்கு எடுத்த சீன நிறுவனம், பணியை முறையாக செய்யவில்லை என்றும், அதற்கு ஆளும் செரீபியா அரசு துணைபோனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஆளும் அரசைக் கண்டித்து மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பினரும் தன்னெழுச்சியாக நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு பகலாக செல்போன் டார்ச்சை எரியவிட்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் செரீபியாவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.