65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 10 ஆண்டுகளில் செய்து முடித்ததாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார்.
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், அஷ்டலட்சுமி மாநிலங்களான வடகிழக்கு மாநிலங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், கடந்த 65 ஆண்டுகால ஆட்சியை விட பிரதமர் மோடி ஆட்சியில் தேசம் அபார வளர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.