திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்டது குறிப்பிடப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த விவாகரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டார்.
அதில் தர்காவின் அறிவிப்பு பலகையில் “கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன” என்று வைக்கப்பட்ட வாசகம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதநல்லிணக்கத்தை பேணும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 4-ம் தேதி வரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தெரிவித்த ஆட்சியர், ஜனவரி 21-ல் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்டது பற்றி குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.