கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணிக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியானது.
மகிழ்திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணிக்கே திரையிடப்பட்டது.
தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள காளீஸ்வரி திரையரங்கில் விடாமுயற்சி படம் வெளியானது. இதனை முன்னிட்டு அஜித்குமார் கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பாடலுக்கு நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக்ததில் காலை 9 மணிக்கு படம் ரிலீசானது. சென்னை காசி, ரோகினி உள்ளிட்ட திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் திரளான ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.