சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகததால், பக்ரூதின் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி, இளவழகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறையில் இருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.
ஆனால் சாட்சிகள் யாரும் விசாரணைக்கு ஆஜராகததால், அடுத்த விசாரணையின் போது சாட்சிகள் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 10 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.