உழவர் பெருமக்களின் நலனுக்கு போராடியவர் நாராயணசாமி நாயுடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவியவருமான ஐயா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்த தினம் என கூறியுள்ளார்.
தமிழகத்தின் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து தனது வாழ்வை தொடங்கிய நாராயணசாமி நாயுடு , விவசாயத்தின் மீது தனக்கிருந்த அதீத பற்றின் காரணமாக, வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் என தெரிவித்துள்ளார்.
ஐயா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்த தினத்தில், விவசாயத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவரது தியாகங்களை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.