டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இத்தாலியின் மிலன் பகுதியில் இருந்து டெல்லி வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த 2 பயணிகளை தனிப்பட்ட முறையில் சோதனை செய்தனர்.
அதில், இருவரும் உடமைகளில் தங்கத்தை மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரிடம் இருந்து 7 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.