தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
விழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள வைரத்தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். 4 வீதிகள் வழியாக வந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.