பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை தமன்னா, படப்பிடிப்பின்போது கேரவனில் தனக்கு நடந்த விரும்பத் தகாத சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த சம்பவத்தால் தமது கண்கள் குளமாகியதாகவும், மேக்கப் உடன் இருந்ததால் அப்போது அழ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தருணத்தில் கண்ணாடியைப் பார்த்து தன்னை தாமே தேற்றிக் கொண்டு, அந்த துயரத்தில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த சம்பவம் எந்த படப்பிடிப்பின்போது நடந்தது என்பதை அவர் கூறவில்லை.