முறையாக சமைக்காத இறைச்சியில் இருந்து ஜிபிஎஸ் வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், ஜிபிஎஸ் நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது என்றும், இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.