நெல்லையில் பசிக்கு உணவளித்தவர் வீட்டில் ஸ்கூட்டியை திருடிச் சென்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் உணவு கேட்டு வாங்கி சாப்பிட்ட இளம்பெண், அவரது வீட்டிற்கு முன்பு சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை திருடிச் சென்றுள்ளார். ஆனால் கோவில்பட்டி அருகே சென்றபோது பெட்ரோல் இல்லாததால் பாதி வழியில் நின்றிருக்கிறது.
அதனை தள்ளிக் கொண்டு சென்ற போது, எதிரே வந்த போலீசார் விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் அவரது பெயர் கஸ்தூரி என்பதையும் ஸ்கூட்டியை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து கஸ்தூரியை கைது செய்த போலீசார் ஸ்கூட்டியை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.