திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. செங்கப்பள்ளி அருகே முன்னால் சென்ற கனரக லாரியை பேருந்து ஓட்டுநர் முந்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் ஆகிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், 21 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார், விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். விபத்து காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.