வேலூர் அருகே டயர் வெடித்து வேன் விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் சிதறிக் கிடந்த மீன்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.
ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2 டன் கடல் மீன்களை ஏற்றி கொண்டு வேன் புறப்பட்டது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. மேலும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் இருந்து சாலையில் கொட்டிய மீன்களை அப்பகுதி மக்கள் பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச்சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.