கடலூரில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக்கோரி, 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன் மாடு போன்று முகமூடி அணிந்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.
பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மனிதர்களை அவ்வப்போது தாக்கி காயம் ஏற்படுத்துவதோடு, உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன், மாநகராட்சி ஆணையரிடம், மாடு போன்று மூகமூடி அணிந்து வந்து நூதன முறையில் மனு அளித்தார்.
மேலும், தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.