நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வுடன் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது.
பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை உயிரிழந்து விட்டது தெரியவந்தது. மற்றொரு சிறுத்தையுடன் சண்டையிட்டதால் உடலில் காயங்கள் ஏற்பட்டு அந்த சிறுத்தை உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.