சிவகங்கையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மானாமதுரை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8 மாணவிகள் தங்களுக்கு சிலர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதில் பாலு என்பவர், மாணவிகளின் பெற்றோர் தாக்கியதில் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீதமுள்ள 6 பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.