திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தெருநாய்கள் கடித்து பலியான ஆடுகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளியங்காடு தோட்டத்தை சேர்ந்த கங்குசாமி, தனது தோட்டத்தில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை சென்று பார்த்தபோது 30 ஆடுகள் தெருநாய்கள் கடித்து இறந்து கிடந்தன. இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.