ஜெகபர் அலி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.