பல்கலைக்கழக வரைவு நெறிமுறை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை வரும் 28-ஆம் தேதி வரை யுஜிசி நீட்டித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு அதிகாரமளிக்கும் வகையில், யுஜிசி வரைவு நெறிமுறை கொண்டுவந்தது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழகம், கேரளா, ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், வரைவு நெறிமுறையைத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தின.
இதனிடையே, வரைவு நெறிமுறை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் கடந்த 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானிய குழு அறிவிக்கை வெளியிட்டது.