திமுக ஆட்சிக் காலத்தில் மாவட்ட செயலாளர்களை துணை வேந்தர்களாக நியமித்ததன் விளைவாகத்தான், துணைவேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிகளில் ஒருவரை கொடுத்திருக்கிறார்கள். துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வரைவை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறிப்பாக திமுக போன்ற ஆட்சிக்கு தான் தேவை. திமுக ஆட்சியில் தான் அவர்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவரையே துணைவேந்தராக மாற்றினார்கள். கூட்டணிக் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை துணைவேந்தர்களாக நியமித்தார்கள்.
லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்கள் நியமித்தார்கள், அதனால் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் உண்மையானவர்கள், திறமையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, அரசியல் சாயம் இல்லாதவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, நேர்மையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, யுஜிசிக்கு இந்த வரைவு கொடுக்கப்பட்டிருக்கிறது.
திமுக துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் அத்தனை அரசியலும் செய்துவிட்டு இன்று அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். ராகுல் காந்தியை சேர்த்துக்கொண்டு, இந்தி கூட்டணியை சேர்த்துக்கொண்டு, upa அரசாங்கம் நடைபெறும் பொழுது தான் துணைவேந்தர்கள் நியமத்தில் பல முறைகேடுகள் நடந்தது.
அதற்காகத்தான் யுஜிசி என்று வரைவு கொடுத்திருக்கிறது. திமுக இதனை எதிர்த்து போராடுவது வியக்கத்தக்கது. அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காகவே யூஜிசி இதனை நிறுத்தக்கூடாது. இதனால் லஞ்சம் லாவண்யம் ஒழிக்கப்படும், திறமையானவர்கள் தேர்வார்கள் என தெரிவித்தார்.