திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி முருகன் கோயிலில் 3 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில், கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதில், உண்டியல் காணிக்கை மூலம் 98 லட்சத்து 68 ஆயிரத்து 960 ரூபாய் ரொக்கம், 113 கிராம் தங்கம், 9 கிலோ 240 கிராம் வெள்ளி மற்றும் சில வெளிநாட்டு கரன்சிக்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.