உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் புலி தாக்கி 5 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஹ்ரைச்சில் நுழைந்த புலி அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், குழந்தைகளையும் நாய்களையும் இழுத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.