ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை, பெற்றோர் மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அனக்காப்பள்ளி அருகேயுள்ள வத்தடி கிராமத்தில், தனியர் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூற ஆத்திரமடைந்த அவர்கள், ஆசிரியரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.