இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இதை தொடர்ந்து 47 புள்ளி 4 ஓவர்களில் 248 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய ஓப்பனர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் நிலைத்து விளையாடி 87 ரன்கள் அடித்தார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதம் விளாசிய நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.