அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முடிவை அதிபர் டிரம்ப் ரத்து செய்த நிலையில், அவரது உத்தரவுக்கு மற்றொரு நீதிமன்றமும் தடை விதித்தது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், முதல் நாளிலேயே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் எச்1பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி, நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருக்கும் சுமார் 50 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில், டிரம்பின் உத்தரவை வாஷிங்டன் நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்த நிலையில், தற்போது மேரிலாந்து மாகாண நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிபர் டிரம்பின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவது தடைபட்டதால், இந்தியர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்திருக்கிறது.