நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் சென்றுள்ளார். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்க்கெட்டை திறந்து வைக்க முதலமைச்சர் நடைபயணமாக சென்றார்.
அப்போது, சாலையின் இருபுறங்களிலும் நிற்க வைப்பதற்காக பெண்கள் அழைத்துவரப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் லாரியில் இருந்து இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், லாரியில் இருந்து இறங்கி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாகவும், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை எனவும் கூறினர். மேலும், 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என பெண்கள் வேதனை தெரிவித்தனர்.