பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ள இபிஎஸ், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மட்டுமன்றி மூதாட்டிகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.