இலங்கை கடல் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தார்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில்,
2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 229 பேர், 2023-இல் 220 பேர், 2024-இல் 528 பேர், நிகழாண்டில் ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா்.
மேலும் 2021-இல் 5 இந்திய மீனவா்களும், 2024-இல் 2 மீனவா்களும் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா். இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 இலங்கை மீனவர்களும், 2022-இல் 34 பேரும், 2023-இல் 19 பேரும், 2024-இல் 47 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
நிகழாண்டில் இலங்கை மீனவர் ஒருவா் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சா் விளக்கமளித்துள்ளார்.