கேரள மாநிலம் பாலக்காடு குட்டநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் பாகனை யானை மிதித்துக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் பாலக்காடு குட்டநாடு பகுதியில் நேர்ச்சை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அலங்காரத்துடன் அழைத்துவரப்பட்ட யானை திடீரென மிரண்டு ஓடியதால், பாகன் குஞ்சுமோன் அதைக் கட்டுப்படுத்த முயன்றார்.
அப்போது ஆக்ரோஷத்துடன் பிளிறிய யானை, பாகனை மிதித்ததில் அவர் உயிரிழந்தார். யானை தாக்கியதில் மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, வனத்துறையினர் வேறொரு யானையை அழைத்துவந்து மிரண்டு ஓடிய யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.