கேரள மாநிலம் கொச்சியில் உணவகத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர்.
கொச்சியில் இயங்கி வந்த உணவகத்தில் மதிய உணவு நேரத்தில் பாய்லர் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் உணவகத்திலிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.