வேலூர் அருகே ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கோவையில் இருந்து திருப்பதிக்கு இண்டர்சிட்டி விரைவு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த இருவரும் கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த நிலையில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.