வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா? என மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் சென்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே.
அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்