2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிடும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15வது ஆண்டு விழா இசிஆர் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட தொகுதி தலைவர்களுக்கான பட்டியலையும் அவர் வெளியிட்டார். இதையடுத்து பேட்டியளித்த அவர், 2026 தேர்தலின் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.