மதுரையில் ரயில் விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
மதுரை ரயில் நிலையம் அருகே ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெட்டிகள் சிதறி கிடப்பதை போல தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் மீது என்டிஆர்எஃப் குழுவினர் போர்க்கால அடிப்படையில் ஏறி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அந்தரத்தில் நின்ற ரயில் பெட்டியில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது போன்றும் என்டிஆர்எஃப் குழுவினர் தத்ரூபமாக செயல் விளக்கமளித்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் ஏதோ விபத்துதான் நடந்துவிட்டதோ என்ற கவலைதோய்ந்த சிந்தனையில் பார்வையிட்டனர்.