சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையின் பட்டர்பிளை பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பெங்களூருவில் இருந்து 27 டன் ஆப்பிள் பழங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு புறப்பட்டது.
சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டர்பிளை பாலத்தில் வளைவில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுநர் பங்கஜ் யாதவ் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் லாரியின் டேங்கரில் இருந்து வடிந்த டீசலால் விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்து தீப்பற்றுவதை தடுத்தனர்.