தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் வளாகத்தின் அருகே, பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.