கன்னியாகுமரி அருகே தரமற்ற முறையில் விளையாட்டு மைதானத்தின் பணிகள் நடைபெற்றதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவட்டார் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க அப்பகுதி இளைஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.