சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் அதிமுக வட்ட செயலாளர் ராஜசேகரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் 8-வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக உள்ள ராஜசேகர், சிவன் கோவில் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு போராடிய ராஜசேகரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.