சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ஆயிரத்து 420 ரூபாய் உயர்ந்து, கிலோ 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், கடும் பனி காரணமாக சாகுபடி குறைந்துள்ளது.
மேலும், அடுத்து 2 நாட்கள் சுப முகூர்த்த தினம் வருவதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. முல்லைப் பூ 2 ஆயிரத்து 780 ரூபாய்க்கும், கனகாம்பரம் 650 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.