சென்னை பள்ளிக்கரணை அருகே, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாலாஜி நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக, லோகேஷ், பூபதி, விநாயகம் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.