முதல்வர் பங்கேற்ற விழாவிற்கு அதிக அளவிலான அரசு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டதால், மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
இரண்டு நாள் பயணமாக நெல்லைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்றார். இன்று முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் அதிக அளவிலான கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்களை அழைத்து வர அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கொக்கர குளத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.