தவெக கட்சியில் செயின் பறிப்பு குற்றவாளிக்கு பதவியா? என கேள்வி எழுப்பி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி எழுதிய கடிதம் இணையத்தில் வைலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் உள்ளதாக கூறி அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது தொடர்பாக குலசேகரத்தை சேர்ந்த சிவா என்பவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு எழுதிய கடிதத்தில், செயின் பறிப்பு முக்கிய குற்றவாளி மற்றும் காவலர் மீது கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை செய்தவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.