சாதி, மொழி வேறுபாடின்றி இந்துக்கள் இணைந்து செயல்பட்டால் உலகிற்கு நன்மை பயக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
அனைத்து இந்துக்களும், சாதி மற்றும் மொழி வேறுபாடின்றி ஒன்றுபட்டால் உலகம் பயனடையும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, சமூகத்தின் பலம் அதன் ஒற்றுமையிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்து சமூகம் ஒற்றுமையாக இருப்பது, அதன் வலிமையை அதிகரிக்கும் எனவும் மோகன் பகவத் தெரிவித்தார்.