கடந்த ஆண்டு 93 சதவீத தமிழ் படங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும், 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதாகவும், 2k லவ் ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 2k லவ் ஸ்டோரி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய இயக்குனர் பிரபு சாலமன், நல்ல ஒரு இசை இல்லாமல் நல்ல ஒரு கதையை திரையில் சொல்ல முடியாது என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் படப்பிடிப்பை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் தரப்பில் பேசி வருவதாக தெரிவித்தார்.