திருச்சி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் முக்கிய நபருக்கு வரும் 21ஆம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீவட்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய நான்கு பேர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் ஜாமின் வழங்கினார். வழக்கின் முக்கிய நபரான வசந்தக்குமாருக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.