மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கான நிதியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்ட ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாக மொத்தம் 13 ஆயிரத்து 718 கோடியே 65 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதில் தமிழ்நாட்டுக்கு 528 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியையும் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ஆயிரத்து 708 கோடியும், பீகாருக்கு ஆயிரத்து 570 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ஆயிரத்து 392 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ஆயிரத்து 174 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.