எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளநிலை நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெறுமென தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்தவதற்கான கடைசி நாள் மார்ச் 7 ஆம் தேதியாகும். மே 1 ஆம் தேதி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படவுள்ளது என்றும், இளநிலை நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.