புதிய வருமானவரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிய வருமானவரி மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. இதையடுத்து புதிய வருமானவரி சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதா, நேரடி வரிச்சட்டத்தை புரிந்துகொள்வதை எளிதாக்கவும், புதிய வரிச் சுமையை குறைக்க ஏதுவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிதிக்குழுவிற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.